தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத், அர்ஜுன் ,திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன் , பிரியா ஆனந்த், ஜார்ஜ் மரியான், மடோனா செபாஸ்டின் , மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி , மிஸ்கின் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.இப்படி வெளியான திரைப்படம்,
கலவையான விமர்சனங்களைளே பெற்று வருகிறது . இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் முதல் பாதி மட்டும் தான் மாஸாக இருக்கிறது என்றும் இரண்டாம் பாதி சுமாராக இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி இருந்தும் கூட ,
இந்த திரைப்படம் முதல் நாளில் 140 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்க்கு மிருக தோஷம் உள்ளதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர் . அந்த வகையில் மிருகங்களின் பெயர் கொண்ட குருவி, சுறா ,புலி ,பைரவா, பீஸ்ட் போன்ற ,
திரைப்படங்கள் விஜய்யின் காலை வாரிவிட்டது . குறிப்பாக விஜய்யின் கேரியரிலேயே அதிகம் மொக்கை வாங்கியது இந்த படங்கள் தான் . இதன் பிறகு நல்ல நல்ல கதை களங்களை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் மீண்டும் லியோ என்ற மிருகத்தின் பெயர் கொண்ட படத்தில் நடித்து,
மீண்டும் மொக்கை வாங்கி இருக்கிறார் . இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும் , விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இதற்குத்தான் உஷாரா இருங்கன்னு சொன்னா கேட்டா தானே என்று கூறி வருகின்றனர்…