April 28, 2024

என்னது , நடிகர் விஜய்க்கு “மிருக தோஷம்” இருக்கா ..?? குருவி முதல் லியோ வரை ..!! அடிமேல் அடி வாங்கும் தளபதி ..!!

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் லியோ.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத், அர்ஜுன் ,திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன் , பிரியா ஆனந்த், ஜார்ஜ் மரியான்,  மடோனா செபாஸ்டின் , மன்சூர் அலிகான்,  பாபு ஆண்டனி , மிஸ்கின் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.இப்படி வெளியான திரைப்படம்,

கலவையான விமர்சனங்களைளே பெற்று வருகிறது . இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் முதல் பாதி மட்டும் தான் மாஸாக இருக்கிறது என்றும் இரண்டாம் பாதி சுமாராக இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அப்படி இருந்தும் கூட ,

இந்த திரைப்படம் முதல் நாளில் 140 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்க்கு மிருக தோஷம் உள்ளதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர் . அந்த வகையில் மிருகங்களின் பெயர் கொண்ட குருவி, சுறா ,புலி ,பைரவா, பீஸ்ட் போன்ற ,

திரைப்படங்கள் விஜய்யின் காலை வாரிவிட்டது . குறிப்பாக விஜய்யின் கேரியரிலேயே அதிகம் மொக்கை வாங்கியது இந்த படங்கள் தான் . இதன் பிறகு நல்ல நல்ல கதை களங்களை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் மீண்டும் லியோ என்ற மிருகத்தின் பெயர் கொண்ட படத்தில் நடித்து,

மீண்டும் மொக்கை வாங்கி இருக்கிறார் . இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும் , விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இதற்குத்தான் உஷாரா இருங்கன்னு சொன்னா கேட்டா தானே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *