May 1, 2024

ஆண்களை மயக்க தான் இப்படியொரு கவர்ச்சி உடையா ..?? ஓப்பனாக சொல்லிய ” பிக்பாஸ் ” மாயா ..!!

மாயா கிருஷ்ணன் ஓர் பிரபலமான மாடல் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை மாயா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு விக்ரம் திரைப்படம் தான் நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

இதைத்தொடர்ந்து சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் மாயா.  ஆனால் இவர் தொடர்ந்து ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் இவரைப் பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள் தான்,

அதிகம் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மாயா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . இதைப் பார்த்த ஒரு சிலர் ஆண்களை மயக்குவதற்கு தான் இப்படி கவர்ச்சி ஆடைகளை ,

இணையத்தில் பதிவிடுகிறீர்களா .? என்று கமெண்ட் செய்துள்ளனர் . இதற்கு பதிலளித்த மாயா , இங்கு இருக்கும் எல்லா பெண்களுமே மற்றவர்களை கவருவதற்காகவும் , கிளாமராக தெரிய வேண்டும் என்பதற்காகவும்  கிளாமர் உடைகளை போடுவது கிடையாது.

அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ , அதை போடுகிறார்கள் . மேலும் பிகினி உடை , மினி ஸ்கேட்  அணிவதால் அது ஒன்றும் ஆபாசம் கிடையாது . இந்த சமூகம் என்ன சொன்னாலும் உங்களுக்கு பிடித்த ஆடையை மட்டுமே அணியுங்கள் என்று கூறியிருந்தார் மாயா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *