April 26, 2024

குத்து விளக்குடன் இருக்கும் குடும்ப குத்து விளக்கு ..!! 42 வயதிலும் கொள்ளை அழகில் இருக்கும் சினேகா..!! ரசிகர்களை மயக்கும் புகைப்படங்கள் ..!!

90 ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சினேகா.  மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளியான என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . ஆனால் இந்தத் திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று தரவில்லை . பின்னர் இவர் நடித்த ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் ,புன்னகை தேசம் ,

உன்னை நினைத்து ,விரும்புகிறேன் ,பார்த்திபன் கனவு ,வசூல்ராஜா எம்பிபிஎஸ் ,ஆட்டோகிராப் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால்,

இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது . இதன் பிறகு கதைத் தேர்வில் தடுமாறிய சினேகாவின் மார்க்கெட்டும் கொஞ்சம் தடுமாறியது . இதன் பிறகு குணச்சித்திர வேடம் மற்றும் இரண்டாம் கதாநாயகியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் சினேகா.

அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சினேகா . இப்படி இருக்கும் நிலையில் 42 வயது ஆகியும் கூட இன்னும் அதே அழகில் மின்னி கொண்டுதான் வருகிறார் நடிகை சினேகா.  அந்த வகையில் ,

தமிழ் சினிமாவில்  ஒரு குடும்ப குத்து விளக்காக இருந்து வரும் சினேகா குத்து விளக்குடன் எடுத்த புகைப்படங்களை பதிவித்துள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் சினேகா மீண்டும் குடும்ப குத்து விளக்கு என்று நிரூபித்துள்ளார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *