April 25, 2024

ஒரு நிமிஷம் நடிப்பதற்கு ஒரு கோடியா..?? லால் சலாம் படத்திற்காக சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம் ..!! மொத்தம் இத்தனை நிமிஷம் தான் நடிச்சாரா ..??

வருகின்ற ஒன்பதாம் தேதி ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,விஷ்ணு விஷால் ,விக்ராந்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் லால் சலாம் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா பல வருடங்களுக்கு கழித்து லால் சலாம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் . இந்த படத்தில் விஷ்ணு விஷால் ,விக்ராந்த், விக்னேஷ் , லிவிங்ஸ்டன், செந்தில் ,

ஜீவிதா ,கேஸ் ரவிக்குமார் ,தம்பி ராமையா , நீரோசா ,அனந்திகா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான்,

இசையமைத்துள்ளார் . மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .

அந்த வகையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 35 லிருந்து 40 நிமிட காட்சிகளில் மட்டும்தான் வருவாராம் . அதற்காக 40 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  அப்படி பார்த்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் ,

வாங்கி இருக்கிறார் ரஜினிகாந்த். மேலும் தன்னுடைய மகளின் படம் என்று நினைத்திருந்தால் ரஜினிகாந்த் சம்பளத்தை எவ்வளவோ குறைத்திருக்கலாம் . ஆனால் அவர் அப்படி செய்யவில்லை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *