April 24, 2024

கோலாகலமாக நடந்துமுடிந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம்..!! நேரில் சென்று வாழ்த்திய தமிழ் பிரபலங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜயகுமார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த விஜயகுமார் பின்னர் ஹீரோ ,வில்லன், குணசித்திர நடிகர் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.  மேலும் இரண்டு திருமணம் செய்து கொண்ட விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

இதில் அனிதா என்ற மகளைத் தவிர மீதியுள்ள அருண்விஜய் , ப்ரீத்தா , ஸ்ரீ தேவி , வனிதா , கவிதா எல்லோருமே சினிமாவில் நடித்திருக்கின்றனர் . மேலும் ஊரு  கண்ணு படும் அளவிற்கு பெரிய குடும்பமாக வாழ்ந்து வரும் விஜயகுமாரின் பேத்திக்கு கோலாகலமாக திருமணம் முடிந்திருக்கிறது.

அந்த வகையில் விஜயகுமாரின் மகளான டாக்டர் அனிதாவின் மகளான தியாவுக்கு இன்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.  இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவில் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,பிரபு ,தியாகு போன்ற பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு,

மணமக்களை வாழ்த்தியிருந்தனர் . தற்போது அந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *