April 28, 2024

சந்திரமுகி 2 சூப்பர் ஹிட் ஆகணும் ..!! என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க ..!! குருவை சந்தித்த சிஷ்யன் ..!!

ராகவா லாரன்ஸ் ஓர் பிரபலமான நடனக் கலைஞர் ,நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்தார் . மேலும் இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் வேட்டையனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார்.  இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து,

கங்கனா ரனாவத் , ராதிகா ,லட்சுமிமேனன் ,வடிவேலு ,மகிமா நம்பியார் ,சிருஷ்டி டாங்கே போன்ற பல பரபலங்கள் நடித்துள்ளனர் . இந்தத் திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது.  இதனால் சந்திரமுகி படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ் . அதுமட்டுமில்லாமல் கோவிலில் சிறப்பு பூஜையும் செய்துள்ளனர் . அந்த புகைப்படங்கள் தற்போது அந்தப் புகைப்படங்கள் ன் இணையத்தில் வெளியாகியுள்ளது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *