April 25, 2024

மு ழு சந்திர முகி யாக மா றிய பிர பல நடி கை ..!! ஜோதி காவு க்கே டப் கொ டுப் பார் போ ல ..!! புகைப்பட த் தை வெ ளியிட்ட சந் திரமு கி 2 பட க்கு ழு ..!!

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி.  இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பிரபு, ஜோதிகா ,வடிவேலு, நயன்தாரா, நாசர், விஜயகுமார் , வினீத் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை,

சூப்பர் ஸ்டாரை வைத்து தொடங்க நினைத்தார் இயக்குனர் பி வாசு . ஆனால் அது நடக்கவில்லை . இதனால் ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை தொடங்கினார் இயக்குனர் பி வாசு . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் , வடிவேலு , ராதிகா , லட்சுமி மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் .

அப்படி இந்த படத்தில் ஜோதிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார் . இவர் ஏற்கனவே தமிழில் வெளியான தாம் தூம் மற்றும்  தலைவி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான  தேசிய விருதை ,

வென்று இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத் . இதனால் சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பார் என்று இவரை தேர்வு செய்தனர்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.இந்நிலையில்,

முழு சந்திரமுகியாக மாறிய கங்கனா ரனாவத்தின்  புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர் சந்திரமுகி 2  படக் குழுவினர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் ஜோதிகாவுக்கு டப் கொடுப்பார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *