April 23, 2024

எல்லா அமைச்சர்களுக்கும் அழைப்பு ..!! மகளின் திருமணத்துக்காக பம்பரமாய் சுழலும் ரோபோ சங்கர் ..!!

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் ரோபோ சங்கர் . குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் ரோபோ சங்கர். இதன் மூலம் இவருக்கு சினிமாவில்,

நடிக்கவும் வாய்ப்பு வந்தது . அந்த வகையில் தமிழில் வெளியான பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் ரோபோ சங்கர் . மேலும் ரோபோ சங்கருக்கு திருமணமாகி இந்திரஜா சங்கர் என்ற மகள் இருக்கிறார் .

இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார் இந்திரஜா.  இப்படி இருக்கும் நிலையில் இந்திரஜாவுக்கும் அவருடைய உறவினர் மகனுக்கும்,

விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது . அதற்காக இப்போதே  பத்திரிக்கை வைக்க தொடங்கி விட்டார் நடிகர் ரோபோ சங்கர் . அந்த வகையில் முதல் வேலையாக தமிழ்நாட்டு அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறார் ரோபோ சங்கர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *