April 30, 2024

நடிகர் பிரபுதேவாவின் கூல் போட்டோஸ் ..!! 50 வயதிலும் எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா . மூத்த நடன கலைஞரான சுந்தரத்தின் மகனான பிரபுதேவா ஆரம்பத்தில் குரூப் டான்ஸ்ராக இருந்து வந்தார்.  பின்னர் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்  நடிகர் பிரபுதேவா . இதைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியான காதலன் திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும்.,

பிரபலமாக்கியது  என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மின்சாரகனவு , காதலா காதலா , சுயம்வரம் , வானத்தைப்போல போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் பிரபுதேவா .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதோடு இவர் தமிழில் வெளியான போக்கிரி ,வில்லு ,எங்கேயும் காதல், வெடி போன்ற பல திரைப்படங்களை,

இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் ,பேட்ட ராப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் .இப்படி இருக்கும் நிலையில் இவருடைய கூல் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *