May 2, 2024

எம் ஜி ஆருக்கு பிறகு ..!! அஜித்துக்கு மட்டும் தான் இப்படி நடந்ததா ..?? தல னா சும்மவா ..?? வெளிவந்த சுவாரிசிய தகவல் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் இன்று தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் அஜித் . அப்படி ஆரம்பத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த அஜித் அண்மைக்காலமாக வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது  இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் அஜித் . இப்படி இருக்கும் நிலையில் எம்ஜிஆருக்கு பிறகு அது மாதிரி அஜித்துக்கு மட்டும்தான் நடந்துள்ளதாம்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களில் ஒன்று தான் சிட்டிசன்.  இந்த படத்தில் மாறுப்பட்ட நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பார் நடிகர் அஜித் . இந்த திரைப்படம் சென்னையில் உள்ள தேவி திரையரங்கிலும்,

திரையிடப்பட்டு இருக்கிறது . குறிப்பாக இந்த படத்தில் அஜித் பல வேடங்களில் நடித்திருந்ததால் , இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது . இதனால் இந்த படத்தின் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு ரசிகர்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று இருந்தார்களாம்.

ஆனால் இதற்கு முன்பு எம் ஜி ஆர் நடித்து வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு இதே போன்று நீண்ட வரிசை இருந்ததாம் . இதை அந்த தியேட்டர் ஓனரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *