April 25, 2024

அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் ..!! விடாமுயற்சி படத்தின் வில்லனே இவர் தான் ..!! அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல் ..!! அப்போ சம்பவம் கன்பார்ம் ..!!

துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகியும் கூட அஜித்தின் விடாமுயற்சி படம் தொடங்காமல் இருந்து வந்தது . இப்படி இருக்கும் நிலையில் ஒரு வழியாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது.  இயக்குனர் மகிழ் திருமேனி  இயக்கத்தில் உருவாகி  வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா, ரெஜினா , ப்ரியா பவானி சங்கர் போன்ற மூன்று கதாநாயகிகள் ,

நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் நடிகர்களின் லிஸ்ட் இன்னும் வெளியாகவில்லை . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பது இவர் தான் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .அவர் வேறு யாருமில்லை பிக் பாஸ் ஆரவ் தான் .

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்கு பெற்று தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்  ஆரவ். மேலும் ஆரம்பத்தில் அமர காவியம் , ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரவ்  கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் ,

என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மகிழ் இயக்கிய கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் நடிகர் ஆரவ்.  இதை அடுத்து மீண்டும் மகிழ் திருமேனி இயக்க  உள்ள விடாமுயற்சி படத்தில் வில்லனாக,

நடிக்க உள்ளாராம் பிக் பாஸ் ஆரவ் . அதை உறுதி செய்யும் வகையில் தற்போது ஏர்போர்ட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஆரவ். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *