April 27, 2024

உதவி இயக்குனருக்கே பெண்ணை கொடுத்த ஷங்கர் ..!! கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம் ..!!

இயக்குனர் ஷங்கர்  தவிர்க்க முடியாத முன்னணி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . தொடர்ச்சியாக பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தார் இயக்குனர் ஷங்கர்  . மேலும் ஷங்கருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.  இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ரோகித் என்ற கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற்றது .

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே பாலியல் வழக்கில் சிக்கினார் ரோகித்.  இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவரிடமிருந்து பிரிந்து வந்து விட்டாராம் ஷங்கரின் மகள் . மேலும் பல வருடமாக வீட்டிலேயே இருந்து வந்த மகளுக்கு,

தன்னுடைய உதவியை இயக்குனரையே மணம்முடிக்க உள்ளாராம் ஷங்கர்  . அந்த வகையில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் தான் தருண் கார்த்திக்.  இவர் ஷங்கருடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறாராம் . அப்படி தன்னுடன் வேலை பார்க்கும் போது ,

அவருடைய திறமையை பார்த்து வியந்து போன ஷங்கர்  தன்னுடைய பெண்ணை அவருக்கே மணமுடிக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் தருண் கார்த்திக் பாடகர், பாடலாசிரியர் ,எடிட்டர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறாராம்.  மேலும் இவர் விரைவில்,

இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளாராம் . இப்படி இருக்கும் நிலையில் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர்  அக்காவின் நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.  இதோ அந்தப் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *