May 6, 2024

லியோ படத்தில் “பிக்பாஸ்” வனிதாவின் மகனா ..?? எத்தனை பேர் இதை கவனிச்சீங்க ..?? வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

கடந்த வியாழக்கிழமை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் லியோ . இரட்டை வேடத்தில் கலக்கிய விஜய் உடன் இணைந்து திரிஷா ,சஞ்சய் தத் ,அர்ஜுன் ,கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் ,

கலவையான விமர்சனங்களைளே பெற்று வருகிறது .  இருந்தாலும் இந்த படத்திற்கு அதிக பலம் சேர்த்தது அனிருத்தின் இசை மற்றும் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் சண்டை காட்சிகள் , இதற்காகவே இந்த திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட  சாதனை படைத்து வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தில் வனிதாவின் மகனின் புகைப்படம் இடம் பெற்று இருக்கிறது . அந்த வகையில் வனிதாவின் மகனான ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது விஜய் வனிதாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார் . அப்போது வனிதாவின் மகனை தன்னுடைய மடியில் ,

உட்கார வைத்து புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார் . தற்போது லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் அர்ஜுனிடம் நான் லியோ இல்லை என்பதை நிரூபிப்பதற்காக , தன்னுடைய குடும்பத்தின் புகைப்படங்களை காண்பிப்பார்.  அதில் இது என்னுடைய மகனின்,

முதல் பிறந்தநாளின்  போது எடுத்த புகைப்படம் என்று வனிதாவின் மகனோடு எடுத்த புகைப்படத்தை காண்பிப்பார் நடிகர் விஜய்.  இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *