April 22, 2024

குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைப்பாரா விஜய் ..!! தமிழக வெற்றி கழகத்தின் நோக்கம் என்ன ..??

நடிகர் விஜய் பல வருடங்களாகவே அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிக்கொண்டு வந்த நிலையில் நேற்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் . அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய புதிய கட்சியை நேற்று தொடங்கியுள்ளார் நடிகர் விஜய் . இந்த தகவலை கேட்ட விஜய் ரசிகர்கள் தலைகால் புரியாமல் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர் .

மேலும் நான் அரசியலுக்கு வெறும் பொழுதுபோக்கிற்காக வரவில்லை , அது ஒரு சமூகப் பணி என்று தன்னுடைய தெளிவான பார்வையை வெளிப்படுத்தி இருந்தார் விஜய் . குறிப்பாக விஜய்யின் திடீர் அரசியல் என்ட்ரி மற்ற கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் அதிமுகவை விட திமுகவை பொறுத்தவரை குடும்ப அரசியல்தான் நடந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அப்படி கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவருடைய மகனான மு க ஸ்டாலின் ,அவருக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் ,அவருக்கு பிறகு அவருடைய மகன்,

என்று நீண்டு கொண்டே போகிறது.  இந்த நேரத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதால் கண்டிப்பாக குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கும் , விஜய்க்கும் இடையே ஒரு சில மனஸ்தாபங்கள்,

இருப்பதாகவும் கூறப்படுகிறது . அப்படி இருந்தும் கூட விஜய் கட்சி ஆரம்பித்ததும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் உதயநிதி ஸ்டாலின். மேலும்  விஜய் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா .? இல்லையா .? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *