April 29, 2024

அதே கம்பீரம் அதே பார்வை ..!! அப்படியே சூப்பர் ஸ்டாரை உரித்து வைத்திருக்கும் தனுஷின் மகன் ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் மூத்த முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  தற்போது இவர் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் . இதனிடையே லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டாருக்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2௦௦4 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.  குறிப்பாக திருமணமாகி 18 வருடங்கள் கழித்து திடீரென தனுஷ், ஐஸ்வர்யாவும் விவாகரத்து ,

பெற்று பிரிந்து விட்டனர்.  இருந்தாலும் மாறி மாறி மகன்களை இருவரும் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.  மேலும்  17 வயதான தனுஷின் மகன் தற்போது பள்ளியில் படித்துக்கொண்டு வருகிறார் . அவ்வபோது அப்பாவின் பட நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார் யாத்ரா .

இப்படி இருக்கும் நிலையில் தனுஷின் மகன் அப்படியே இளம் வயது ரஜினியை போலவே இருப்பது தான்  அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் சிறு வயது புகைப்படத்தையும் , தனுஷின் மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தையும் ,

வைத்து ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *