May 2, 2024

மீண்டும் அஜித் படத்தை இயக்குவீர்களா ..?? கையெடுத்து கும்பிட்ட சிறுத்தை சிவா ..!! தீயாய் பரவும் வீடியோ ..!! ஷாக்கில் அஜித் ரசிகர்கள் ..!!

சிறுத்தை சிவா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார் . ஆரம்பத்தில் சார்லி சாப்ளின் , மனசெல்லாம் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த சிவா கடந்த 2011 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி இவர் இயக்கிய திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதன் பிறகு தான்,

சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டு வருகிறார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து வீரம் ,வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று தொடர்ச்சியாக நான்கு திரைப்படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் சிறுத்தை சிவா . இந்த நான்கு திரைப்படங்களுமே ,

நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.  இருந்தாலும் தொடர்ச்சியாக சிறுத்தை சிவாவுக்கு மட்டுமே அஜித் வாய்ப்பு கொடுக்கிறார் என்று அஜித் ரசிகர்களே கொந்தளித்தார்கள்.  இதை அடுத்து தற்போது நடிகர்   சூர்யாவை வைத்து கங்குவா  என்ற படத்தை இயக்கிக் கொண்டு ,

வருகிறார் இயக்குனர் சிறுத்தை சிவா . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சிறுத்தை சிவாவிடம்  அடுத்து அஜித்துடன் பணியாற்றுவீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.  அதற்கு ஆள விடுங்கடா சாமி என்று சொல்வது போல,

கையெடுத்து கும்பிட்டு உடனே சென்று விட்டார் இயக்குனர்  சிறுத்தை சிவா.  அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *