April 25, 2024

மீண்டும் ஒரு தங்கை சென்டிமென்ட்டா ..?? விஜய்க்கு தங்கையாக நடிப்பது யார் தெரியுமா ..?? இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்.  சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த் ,பிரபுதேவா, மோகன்,

சினேகா, லைலா ,மீனாட்சி போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக ,

பிரபல இளம் நடிகை கமிட் ஆகியுள்ளாராம் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை இவானா தான்.  சிறு வயதிலேயே தன்னுடைய தங்கையை இழந்துவிட்டதால் தன்னுடைய படங்களில் தங்கை சென்டிமென்ட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் .

அந்த வகையில் இந்தப் படத்திலும் தங்கை சென்டிமென்ட் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அப்படி இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக லவ் டுடே படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை இவானா நடிக்க உள்ளதாக ,

தகவல் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ஷ்டம் அடிச்சா இப்படி அடிக்கணும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *