April 25, 2024

எனக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு தான் வேண்டும் ..!! ஓவர் அலப்பறை பண்ணும் இளம் நடிகர் ..!! ரெண்டு படம் ஹிட்டானதற்கே இப்படியா ..??

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் வெற்றி.  கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான எட்டு தோட்டாக்கள் என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் வெற்றி . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் வெற்றி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த ஜிவி திரைப்படமும் ,

இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வனம் ஜோதி ,ஜிவி 2, மெமரிஸ் ,பம்பர் என்று வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் வெற்றி.  இப்படி இருக்கும் நிலையில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் போதே,

இவருடைய நடவடிக்கை தயாரிப்பாளரை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளதாம். அந்த வகையில் தற்போது ஆலன் என்ற படத்தில் நடித்து வருகிறாராம் வெற்றி . இந்த படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறதாம் . அப்போது பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து தான் எனக்கு ,

சாப்பாடு வர வேண்டும் என்று கூறுகிறாராம் வெற்றி . ஆனால் வாரணாசியில் பெரிய அளவில் ஸ்டார் ஹோட்டல்கள் எதுவும் கிடையாதாம் . சாதாரண ஹோட்டலில் இருந்து தான் இவருக்கு டிபன் வரவழைக்கப்பட்டிருக்கிறது . ஆனால் நான் இதை தான் சாப்பிடுவேன் , அதை சாப்பிட மாட்டேன் என்று ,

சொல்லி எல்லோரையும் கடுப்பேற்றுகிறாராம் வெற்றி.  குறிப்பாக ஒரு இட்லி வடைக்காக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழலும் வெற்றியால் ஏற்பட்டதாம்.  இதை பார்த்த ரசிகர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *