May 1, 2024

சீக்கிரம் கல்யாணம் பண்ணு ..!! நடிகர் சங்க கட்டித்தை கட்டுவதற்கு நிதியுதவி கொடுத்த உதயநிதி ..!! பூரித்துப்போன விஷால் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஷால்.  தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகனான விஷால் செல்லமே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற விஷால் இந்த படத்தை தொடர்ந்து திமிரு ,சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் 46 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகர் விஷால் . அதற்குக் காரணம் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்திருந்தார் நடிகர் விஷால் . மேலும் பல வருடமாக ,

நடிகர் சங்க கட்டிடத்தின் வேலை நடந்து கொண்டிருக்கிறதே தவிர இன்னும் கட்டிடம் முடிந்த பாடு இல்லை . மேலும் அதற்கான போதிய நிதி இல்லாததால் அந்த வேலை பாதியிலேயே நின்றதாகவும் கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் சீக்கிரம் நடிகர் சங்க கட்டிடத்தை,

கட்ட வேண்டும் என்பதற்காகவும்,  விஷால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய் நடிகர் சங்கத்துக்கு கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.  இதைப் பார்த்து பூரித்துப்போன விஷால் அன்புள்ள உதயா, ஒரு நண்பனாக,

நடிகராக, தயாரிப்பாளராக , விளையாட்டுத்துறை அமைச்சராக நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்ததற்கு நீ எந்த விதத்திலும் உதவ தயாராக இருப்பது எனக்கு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,மிக்க நன்றி என்று கூறியுள்ளார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *