April 28, 2024

அச்சு அசல் பிச்சைக்காரன் போல மாறிய தனுஷ் ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் மிகவும் பிசியான நடிகராக மாறிவிட்டார் நடிகர் தனுஷ் . அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இதைத்தொடர்ந்து தன்னுடைய ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கி நடித்து இருக்கிறார் .

இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதை முடித்த கையோடு தற்போது புது முகங்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கிக் கொண்டு வருகிறார் தனுஷ் . இப்படி இயக்கம் நடிப்பு என்று,

மாறி மாறி கலக்கிக்கொண்டு வரும் தனுஷ் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகர்ஜுனா,ராஷ்மிகா மந்தனா போன்ற ,

பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று இருக்கிறது.  அந்தப் படப்பிடிப்பில் தனுஷ் பிச்சைக்காரன் போல நடித்திருக்கிறார் . குறிப்பாக படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ,

தன்னை மாற்றிக்கொள்ளும் தனுஷ் இந்த படத்தில் பிச்சைக்காரன் போல மாறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *