April 28, 2024

7ஜி ரெ யின் போ கா லனி 2 வை தொட ங்க ப்போ கும் செல்வ ராக வன் ..!! ஆனா கதா நா யகி இந் த நடி கை யா ..?? வேண் ட வே வேண் டாம் என்று க த றும் ரசிக ர் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 200 4 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.  இந்த படத்தில் ரவி கிருஷ்ணா ,சோனியா அகர்வால், சுமன் செட்டி, விஜயன் ,சுதா ,மனோரமா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  குறிப்பாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ,

வெளியாகிய படங்களில் 7ஜி ரெயின்போ காலனி படம் தான் ரசிகர்களின் பேவரைட் படமாக இருந்து வருகிறது.  அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆன நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்க உள்ளாராம்  இயக்குனர் செல்வராகவன் . மேலும் முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஆனால் கதாநாயகி சோனியா அகர்வால் இல்லையாம் . இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் தானாம் . இதுதான் தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  காரணம் அதிதி ஷங்கருக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் சுத்தமாக செட்டாகாது,

என்பது ரசிகர்களுக்கே தெரியும் . அப்படி இருந்தும் எப்படி இயக்குனர் செல்வராகவன் இவரை தேர்வு செய்தார் என்று பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர் . இதனால் இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *