April 22, 2024

30 வருடமாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் நடிகை மாதவியின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

80 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மாதவி.  தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகை மாதவி கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான புதிய தோரணங்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தில்லுமுல்லு, டிக் டிக் டிக் ,ராஜபார்வை ,

தம்பிக்கு எந்த ஊரு ,காக்கி சட்டை , விடுதலை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை மாதவி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன்பிறகு கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை  மாதவி.  திருமணமான பிறகு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் நடிகை மாதவி . கிட்டத்தட்ட 30 வருடமாக தமிழ் சினிமாவை,

விட்டு விலகி இருக்கும் நடிகை மாதவிக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக நடிகை மாதவியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *