May 2, 2024

இவர் இல்லைனா நான் இல்ல ..!! பிக்பாஸ் கோப்பையுடன் குருவை சந்தித்த அர்ச்சனா ..!! வைரலாகும் புகைப்படம் ..!!

வி ஜே அர்ச்சனா ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். ஆரம்பத்தில் சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக இருந்து வந்த அர்ச்சனா கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இப்படி இவர் நடித்த முதல் சீரியலே இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து தேன்மொழி பி ஏ ,

இந்திரா போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இதை அடுத்து சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் அர்ச்சனா . ஆரம்பத்தில் அழு மூஞ்சி என்று பெயர் எடுத்த அர்ச்சனா போகப் போக சக போட்டியாளர்களை அலற வைத்தார் .

அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் அர்ச்சனாதான் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்று ரசிகர்களே கணித்து விட்டனர்.  அப்படி ரசிகர்கள் கணித்தது போலவே பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் அர்ச்சனா.  குறிப்பாக ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் ,

டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றது இதுவே முதல் முறையாகும். இப்படி இருக்கும் நிலையில் வெளியே வந்த பிக் பாஸ் அர்ச்சனா தன்னுடைய குருவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை விஜய் டிவி இயக்குனரான பிரவீன் பென்னட் தான்.

இவர்தான் அர்ச்சனாவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் . இதனால் அவரை ஒரு குரு போல நினைத்து அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் அர்ச்சனா.  இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *