May 1, 2024

சீரியல் வாழ்க்கை வேறு, நிஜ வாழ்க்கை வேறு ..!! தாய்லாந்தில் ஜாலி பண்ணும் ” எதிர்நீச்சல் ” ஜனனி ..!! ” எம்மா ஏய் ” என்று கேட்கும் ரசிகர்கள் ..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  அப்படி கடந்த வருடம் தொடங்கப்பட்ட சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர்நீச்சல் சீரியல் . இயக்குனர் திரு செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மதுமிதா, சபரி பிரசாத் ,கனிகா ,பிரியதர்ஷினி ,ஹரிப்பிரியா, கமலேஷ், சத்ய பிரியா ,திரு செல்வம் போன்ற பல பிரபலங்கள்,

நடித்துக் கொண்டு வருகின்றனர் . இந்த சீரியல் இவ்வளவு பிரபலமாவதற்கு முக்கிய காரணமே ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மாரிமுத்து தான்.  இவர் இருக்கும் வரை இந்த சீரியல் டி ஆர் பியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தது .

ஆனால் அவர் இறந்ததற்கு பின்பு எதிர்நீச்சலின் டிஆர்பி அப்படியே இறங்கிவிட்டது . இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் ஜனனி சக்திவேல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா . இவர் இந்த சீரியலுக்கு முன்பே பிரியாத வரம் வேண்டும் என்ற,

சீரியலில் நடித்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தாய்லாந்து சென்றிருந்த மதுமிதா அங்கு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் ஜனனியா இது என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *