April 28, 2024

69 வயதிலும் கமலுக்கு அடித்த ஜாக்பாட் ..!! மூன்று நடிகைகளுடன் டூயட் பாட போறாரா ..?? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் ..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அப்படியே ராக்கெட் போல உயர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 , இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் என்று அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.

மேலும் இதைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்துடனும் கூட்டணி அமைக்க உள்ளார் கமல்ஹாசன் . அந்த வகையில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இருவரும் ஒன்றாக கூட்டணி சேர்ந்தனர்.  இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது .

இதன்பிறகு 36 வருடங்கள் கழித்து இருவரும் கூட்டணி போட்டனர் . அந்த திரைப்படம் தான் தக் லைப் . இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி ,துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ் ,திரிஷா ,ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் .

இப்படி ஏற்கனவே இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ள நிலையில்,  தற்போது மூன்றாவதாக ஒரு நடிகை இணைந்துள்ளார் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான்.  குறிப்பாக இந்த படத்தில் நடித்திருந்த அனைவருமே இதற்கு முன்பு ,

இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இருந்தாலும் கமல் படத்தில் 3 கதாநாயகி இணைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *