April 29, 2024

12 வருடம் ஒன்றாக வாழ்ந்த கமல் – கௌதமி ..!! பிரிவதற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு தன்னுடைய தரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் கமல்ஹாசன் .  இவர் எந்த அளவிற்கு பெயர்,  புகழை சம்பாதித்தாரோ.?  அதே அளவிற்கு சர்ச்சைகளையும் சம்பாதித்தார் .  அப்படி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து ,

கொண்ட கமல்ஹாசன் நடிகை கௌதமியுடன் 12 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் .  மேலும் இவர்கள் இருவரும் இணைந்து குருதிப்புனல், நம்மவர் ,அபூர்வ சகோதரர்கள் ,தேவர் மகன் ,பாபநாசம் போன்ற பல திரைப்படங்களில் ,

ஒன்றாக நடித்திருந்தனர் . ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர் . பின்னர் ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியிருக்கிறது.  அந்த வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர் .

தற்போது நடிகை கௌதமி தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் கமலும்,  கௌதமியும் ஒன்றாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *