April 30, 2024

அடுத்த படம் சூப்பர் ஹிட் அடிக்கணும் ..!! வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் விஜயகாந்தின் மகன் ..!! வைரலாகும் புகைப்படங்கள் இதோ ..!!

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருமணமாகி விஜய் பிரபாகர்,  சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . இதில் விஜய் பிரபாகர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறாராம் . இளைய மகனான சண்முக பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களும்,

ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  பின்னர் மதுரவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார் சண்முக பாண்டியன்.  இந்த படமும் தோல்வி படமாகவே அமைந்தது . இதன் பிறகு விஜயகாந்தும் ,

சண்முக பாண்டியனும் இணைந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்திருந்தார்கள்.  ஆனால் இந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது . இதை அடுத்து தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சண்முக பாண்டியன்.  குறிப்பாக இந்த படத்திற்காக,

வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து தன்னுடைய உடல் அமைப்பையே மாற்றி இருக்கிறார் சண்முக பாண்டியன்.  அந்த புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த படம் கண்டிப்பாக உங்களை தூக்கிவிடும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *