April 29, 2024

கதாநாயகியான ” பிக்பாஸ் ” பூர்ணிமா ..!! அப்படியே கிராமத்து பெண் போலவே இருக்கிறாரே ..?? வெளிவந்தது படத்தின் ஸ்டில்கள் ..!!

பூர்ணிமா ரவி ஓர் யூடியூப் பிரபலம் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் ஆராத்தி என்ற பெயரில் ரசிகர்களிடையே பிரபலமான பூர்ணிமா ரவி தமிழில் வெளியான பிளான் பண்ணி பண்ணனும் , சோட்டா , அன்னபூரணி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது  . இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா ரவி .

மேலும் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சை போட்டியாளராக இருந்து வருகிறார் பூர்ணிமா ரவி . அதுமட்டுமில்லாமல் இவரும் மாயாவும் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் பூர்ணிமா கதாநாயகியாக,

அறிமுகமாக உள்ளாராம் . அந்த வகையில் இயக்குனர் எம் எஸ் ராஜா இயக்க உள்ள செவப்பி  என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளாராம்  பிக் பாஸ் பூர்ணிமா .இந்த படத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள், மத்தகம் ,  இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமான ரிஷிகாந்த் ,

பூர்ணிமாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் . இந்த படத்தில் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து பெண்ணாகவே நடித்திருக்கிறாராம் பூர்ணிமா .இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறதாம் . தற்போது அந்தப் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *