April 27, 2024

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த “சிறகடிக்க ஆசை” சீரியல் நடிகை ..!! வெளிவந்த திருமண புகைப்படங்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை . இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை டிஆர்பி யில் சக்கை போடு போட்டு வருகிறது . அப்படி இந்த சீரியலில் வெற்றி வசந்த் , கோமதி பிரியா , சுந்தரராஜன் , அனிலா ஸ்ரீகுமார் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியல் நடிகைக்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் ,

நடந்து முடிந்திருக்கிறது . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஹர்ஷலா தான் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா என்ற சீரியல் மூலம் நடித்து பிரபலமானார் ஹர்ஷலா . மேலும் இவர் தமிழ் மொழி சீரியல்கள் மட்டுமல்லாமல் கன்னட மொழி சீரியல்களிலும் நடித்துகொண்டு வருகிறார் .

இப்படி மாறி மாறி பல சீரியல்களில் கலக்கிக் கொண்டு வரும் நடிகை ஹர்ஷலாவுக்கு சமீபத்தில் தான் கோலாகலமாக திருமணம் நடந்திருக்கிறது . அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த அரவிந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து இருக்கிறார் நடிகை ஹர்ஷலா .

அப்படி அந்த திருமண புகைப்படங்களை தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஹர்ஷலா .  இதை பார்த்த ரசிகர்கள் இந்த அழகிய ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *