April 26, 2024

நல்ல நாளில் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன் ..!! எத்தனை நாளாச்சு இவரை இப்படி பார்த்து ..!!

சிவகார்த்திகேயன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர்,  பாடகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமான சிவகார்த்திகேயன் கடந்த 2012 ம் ஆண்டு வெளியான மெரினா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,

எதிர்நீச்சல்,  வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரஜினி முருகன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன் . குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் ,

இருந்து வருகின்றனர் . இதனாலேயே இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது . இப்படி நல்ல பெயருடன் இருந்து வந்த சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்று பரபரப்பை கிளப்பி இருந்தார் டி இமான் .

இதனால் பல நாட்களாக வெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தீபாவளி திருநாளை முன்னிட்டு தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *