April 22, 2024

இன்னைக்கு தெரியும் யாரு நல்லவன்னு ..!! அதிரடியாக அறிவித்த சிவகார்த்திகேயன் ..!! முடிவுக்கு வரப்போகும் டி இமான் பஞ்சாயத்து ..!!

தமிழ் சினிமாவை கலக்கிவரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கலக்கி கொண்டு வந்த சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் சிவகார்த்திகேயன்.

இன்னும் சொல்லப் போனால் நம்ம வீட்டு பிள்ளை போலவே சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார் . இப்படி இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்று பகீர் கிளப்பியிருந்தார் இசையமைப்பாளர் டி இமான்.  அந்த வகையில் டி இமானும்,

சிவகார்த்திகேயனும் இணைந்து மனம் கொத்தி பறவை ,வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ,சீம ராஜா , நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றி வந்தனர்.  அப்போதிலிருந்து இருவரும் அண்ணன்,  தம்பி போல பழகி வந்துள்ளனர் .

இந்நிலையில் சிவகார்த்திகேயனும் , டி இமானின் மனைவியும் உறவில் இருந்தாக அதிர்ச்சி தகவல் வெளியானது . ஆனால் இது குறித்து இப்போது வரை வாய் திறக்காமல் இருந்து வந்தார் சிவகார்த்திகேயன் . இதை அடுத்து இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க தயாராகிவிட்டாராம் சிவகார்த்திகேயன் .

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் அயலான் . இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.  தற்போது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *