April 26, 2024

ரசி கர்க ளே பயப்ப ட தயா ரா ..?? நல் ல நா ள் பார் த்து மி ரட்ட வ ரும் ச ந்திர முகி 2 ..!! ஒரு வழி யாக ரீலி ஸ் தே தி யை அறிவி த்த பட க்கு ழு ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 205 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சந்திரமுகி . இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினி , நயந்தாரா , பிரபு , ஜோதிகா , நாசர் , வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . மேலும் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ,

ச மீபத்தில் தொடங்கினார் இயக்குனர் பி வாசு.  இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார் . அதோடு இவருடன் இணைந்து கங்கனா ரனாவத் ,வடிவேலு ,ராதிகா, லட்சுமிமேனன் ,மகிமா நம்பியார் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாம் . இப்படி இருக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது .

அந்த வகையில் ஆயுத பூஜை அல்லது தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில்,  அந்த நாளில் பெரிய படங்கள் வெளியாவதால் சந்திரமுகி 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை குறிவைத்து வெளியாக இருக்கிறதாம் .

மேலும் இந்தத் திரைப்படம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது . இதனால் மீண்டும் சந்திரமுகியை  பார்ப்பதற்கு ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *