April 26, 2024

நன் றி விஸ்வா சத்தை காட்டுவ தற் காக ..!! ஷங் கர் பட வாய் ப்பை தூக்கி யெறி ந்த சரத்கு மா ர் ..!! இத னால் தா ன் இரு வரும் கூட்ட ணி அமைக் கவி ல்லை யா ..??

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர் .இவரின் படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர் . ஆனால் இயக்குனர் ஷங்கர் பட வாய்ப்பு வந்தும் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் சரத்குமார் . அந்த வகையில் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சரத்குமாருக்கு ,

மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தான் இயக்குனர் பவித்ரன்.  குறிப்பாக பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதன்பிறகு தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,

சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்தார் சரத்குமார்.  அப்போதுதான் ஷங்கர் இயக்க இருந்த ஜென்டில்மேன் படத்தின் வாய்ப்பு சரத்குமாருக்கு வந்தது . ஆனால் அப்போதுதான் இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் ஐ லவ் இந்தியா என்ற படத்தில் ஒப்பந்தமாகி  இருந்தாராம்  சரத்குமார்.

அது மட்டுமல்லாமல் ஜென்டில்மேன் படத்தின் தயாரிப்பாளருக்கும் பவித்ரனுக்கும் ஏற்கனவே ஒரு சில பிரச்சனைகள் இருந்ததாம் . இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனரை எப்படி மறக்க முடியும் என்று எண்ணி அவர்,

செய்த நன்றி கடனுக்காக ஜென்டில்மேன் படத்தில் இருந்து விலகி விட்டாராம் சரத்குமார் . அதன் பிறகு ஷங்கர் இதுவரை 10 திரைப்படங்களில் இருக்கிறார்.  ஆனாலும் சரத்குமார் அவருடைய ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை என்பதை குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *