April 27, 2024

இளையராஜா வரலாற்றில் தனுஷ் நடித்தால் ..!! நான் ஏ ஆர் ரகுமானின் வரலாற்றில் நடிப்பேன்..!! களமிறங்கிய பிரபல நடிகர் ..!! சபாஸ் சரியான போட்டி ..!!

தமிழ் சினிமா உலகில் முக்கிய இசையமைப்பாளராக இருந்து வருபவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் . மேலும் ஆரம்பத்தில் இளையராஜாவிடம் பணியாற்றி வந்த ஏ ஆர் ரகுமான் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார் . இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்திருந்த ,

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்க உள்ளதாம் . அந்த படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளாராம் . பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது .

இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா வரலாற்றில் தனுஷ் நடித்தால் நான் ஏ ஆர் ரகுமானின் வரலாற்றில் நடிப்பேன் என்று களம் இறங்கியுள்ளார் தனுஷின் போட்டியாளர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் சிம்பு தான் . ஆரம்பத்திலிருந்தே தனுஷின் சக போட்டியாளராக,

இருந்து வரும் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா , வெந்து தணிந்தது  காடு போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான் . இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று உருவாகி வருவதால் ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கை,

வரலாற்றையும் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம் . அதில் சிம்புவை  நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் சபாஷ் சரியான போட்டி என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *