May 5, 2024

எவ்வளவு உயரத்துக்கு போனாலும் குடும்பத்தை மறக்காத சிவகார்த்திகேயன் ..!! அயலான் பட நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் ஆஜரான நம்ம வீடு பிள்ளை ..!!

சிவகார்த்திகேயன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான்.  இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ரவிக்குமார் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங், ஈஷா கோபிகர் ,யோகி பாபு, கருணாகரன் ,பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது .  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சிம்பிளாக நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய குடும்பத்துடன் பங்கு பெற்று இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *