April 20, 2024

எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்ததே நான் தான் ..!! புகைப்படங்களை வெளியிட்ட கமல் ..!! நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டாரே ..!!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகரத்திய பெருமை இயக்குனர் ஷங்கருக்கும் சேரும் . அந்த வகையில் ஷங்கரின் திரை வாழ்க்கையிலேயே ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுவது எந்திரன் திரைப்படம் தான் . கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசீகரன் , சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . அதோடு இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராய்,

சந்தானம், கருணாஸ், கலாபவன் மணி,டெல்லி குமார் ,தேவதர்ஷினி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . ஆனால் இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது,

கமல்ஹாசன் தானாம் . அந்த வகையில் இந்தியன் படத்தை முடித்த கையோடு கமல்ஹாசனை வைத்து எந்திரன் படத்தை  தொடங்க நினைத்தாராம் ஷங்கர்.  அந்த படத்திற்கு ரோபோட் என்றும் பெயர் வைத்திருக்கிறார்.  குறிப்பாக அந்த படத்திற்கான போட்டோ சூட்டை கூட நடத்திருக்கிறார்.

ஆனால் இதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கவில்லை.  இதனால் கமல் விலகி விட்டாராம் . இதன் பிறகுதான் சூப்பர் ஸ்டார் கமிட் ஆனாராம்.  இப்படி இருக்கும் நிலையில் எந்திரன் படத்திற்காக கமல் நடத்திய போட்டோ சூட் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *