April 27, 2024

தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிவாஜி இல்லையா ..?? இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாரா ..?? ஒற்றைக்காலில் நின்ற கமல் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவர் மகன்.  இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிவாஜி கணேசன் ,ரேவதி ,கௌதமி, நாசர் ,காக்கா ராதாகிருஷ்ணன் ,வடிவேலு ,சங்கிலி முருகன், தலைவாசல் விஜய் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி,

தயாரித்து இருந்தார் கமல்ஹாசன் . இப்படி வெளியான இந்த திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது மட்டுமல்லாமல் தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது . அது மட்டுமல்லாமல் இப்போது வரை இந்த படத்தின்,

திரைக்கதை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.  மேலும் இந்த படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்  நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் அவர்கள் .  ஆனால் இந்த படத்தில் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகர் தானாம்.

அது வேறு யாருமில்லை நடிகர்கள் எஸ் எஸ் ராஜேந்திரன் அல்லது விஜயகுமாரை நடிக்க வைக்கத்தான் படக்குழுவினர்கள் ஆசைப்பட்டார்களாம்.  ஆனால் கமலுக்கு இதில் திருப்தி இல்லையாம் . அவருக்கு சிவாஜியை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது.

ஆனால் அந்த நேரத்தில் சிவாஜி கணேசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்திருக்கிறார் . பின்னர் அவர் பூரண குணமடைந்து வரும் வரை காத்திருந்து தேவர் மகன் படத்தை எடுத்து முடித்தாராம் கமல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *