April 26, 2024

நடிகை அஞ்சலிக்கு இப்படியொரு தங்கையா ..?? இத்தனை நாளா சொல்லவே இல்ல ..!! வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் தரமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி.  தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய அஞ்சலி கடந்த 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அங்காடி  தெரு என்ற படத்தின் மூலம் தான் .

இந்தத் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தூங்கா நகரம், மங்காத்தா ,எங்கேயும் எப்போதும் ,கலகலப்பு ,வத்திக்குச்சி ,சிங்கம் 2 போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை அஞ்சலி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக அண்மை காலமாக தரமான கதைக்களங்களை,

தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை அஞ்சலி.  இப்படி இருக்கும் நிலையில் அஞ்சலிக்கு அரத்யா என்ற தங்கை இருக்கிறாராம்.  இவர் ஒரு சில தெலுங்கு  படங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் அவருடைய புகைப்படம்,

தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதைப்பார்த்த ரசிகர்கள் அஞ்சலிக்கு இப்படியொரு தங்கையா ..?? சொல்லவே இல்ல என்று கூறிவருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *