April 30, 2024

72 வயசிலையும் இளமை ஊஞ்சலாடுது ..!! மம்மூட்டியோட இளமையின் ரகசியம் என்ன தெரியுமா ..?? வெளிவந்த தகவல் ..!!

கிட்டத்தட்ட 70 வயதுக்கு மேலாகியும் கூட ஒரு முன்னணி நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் மம்மூட்டி . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய மம்மூட்டி குறிப்பிட்ட காலகட்டத்திலேயே மலையாள சினிமாவுலகில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் . இன்னும் சொல்ல போனால் மலையாள சினிமா மீது இருந்த தவறான பிம்பத்தை உடைத்தது மம்மூட்டி தான்.

இப்படி மலையாள மொழிப்படங்களில் கலக்கிக்கொண்டு வந்த மம்மூட்டி தமிழில் வெளியான அழகன் ,தளபதி , கிளிப்பேச்சு கேட்கவா, மக்களாட்சி ,மறுமலர்ச்சி ,எதிரும் புதிரும் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,ஆனந்தம், பேரன்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

மேலும் 72 வயதாகியும் கூட ஓய்வெடுக்காமல் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் மம்மூட்டி . இன்னும் சொல்லப்போனால் கடந்த வருடம் மட்டும் நான்கு வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில்,

72 வயதிலும் இளமையாக இருக்கும் மம்மூட்டியின் இளமையின்  ரகசியம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் மம்மூட்டி எப்போதுமே டயட்டில் தான் இருப்பாராம்.  அதுவும் அசைவ சாப்பாட்டில் என்னை குறைவாக இருந்தால் மட்டும்தான் சாப்பிடுவாராம்.

அதோடு இவருக்கென்று ஒரு தனி சமையல்காரரே இருக்கிறாராம் . அப்படி இரவு 7 மணிக்கு முன்பே சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு புத்தகம் வாசித்த பிறகு தான் தூங்கவே செல்வாராம்.  இதை தினமுமே கடைப்பிடித்து வருவதால் தான் இன்னும் அதே இளமையுடன் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *