April 27, 2024

விவேக் முதல் விஜய் ஆண்டனி வரை ..!! மகன், மகள்களை இழந்து தவித்த 5 தமிழ் சினிமா பிரபலங்கள் ..!! மகளின் மறைவால் உடைந்துபோன விஜய் ஆண்டனி ..!!

பெற்றோர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய குழந்தைகள் தான் அவர்களுக்கு வாழ்க்கையே . அப்படி இருக்கும் போது அவர்களை இழந்துவிட்டால் வாழ்க்கையே வெறுத்து விடும் . அப்படி விவேக் முதல் விஜய் ஆண்டனி வரை குழந்தைகளை இழந்த பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்த விவேக்குக்கு ,

பிரசன்னா என்ற மகன் இருந்தார் . இவர் 13 வயதிலேயே டெங்கு காய்ச்சலால் இறந்து விட்டார்.  இவரைத் தொடர்ந்து பிரபல பின்னணி பாடகியான சித்ரா . இவருக்கு திருமணமாகி பல வருடங்களாக  குழந்தையே இல்லையாம்.  அதன் பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால் எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் தவறி விழுந்து அந்த குழந்தை இறந்து விட்டதாம் . இவரைத் தொடர்ந்து மற்றொருவர் பிரபுதேவா . இவருக்கு  மூன்று மகன்கள் உள்ளனர்.  இதில் மூத்த மகன் தன்னுடைய 13 வது வயதிலேயே கேன்சரால் இறந்து விட்டார் . இவரைத் தொடர்ந்து,

பிரபல பாடலாசிரியரான கபிலன் . இவருக்கு கல்யாணம் ஆகும் வயதில் ஒரு மகள் இருந்தார்.  ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதில் கடைசியாக உள்ளவர் நடிகர் விஜய் ஆண்டனி . தமிழ் சினிமாவில் தான் உண்டு,

தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வரும் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட தகவல் எல்லோரையுமே கலங்க வைத்தது . இதைப் பார்த்த பலரும் விஜய் ஆண்டனி சீக்கிரம் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *