April 22, 2024

பணத்தை சேமிக்கிற வழிய பாருங்க பாலா..!! வடிவேல் பாலாஜிக்காக எத்தனை பேர் வந்தாங்க ..!! பாலாவுக்கு அறிவுரை கூறிய நெட்டிசன் ..!!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்தான் கே பி ஒய் பாலா . அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமான பாலா  டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் . இப்படி சின்னத்திரையில் கலக்கிக்கொண்டு வந்த பாலாவுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது .

அந்த வகையில் தமிழில் வெளியான பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார் பாலா . இந்நிலையில் அண்மைக்காலமாக இவர் செய்து வரும் உதவிகள் அனைத்தும் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது . அந்த வகையில் மலைவாழ் மக்களுக்காக ,

மூன்று புதிய ஆம்புலன்ஸ் வாங்கி தந்தது , சென்னை மக்களுக்காக ஐந்து லட்சம் வழங்கியது என்று பெரிய நடிகர்களே செய்யத் தயங்கும் விஷயங்களை செய்து வருகிறார் பாலா.  இப்படி இருக்கும் நிலையில் செய்யும் உதவியை பார்த்த ஒருவர் முகநூல் பக்கத்தில் கூறியதாவது,

பணத்தை சேமிக்கிற வழிய பாருங்க பாலா , வடிவேல் பாலாஜி உங்களைவிட புகழ்பெற்றவர்.  உடல் நலக்குறைபாடல் இறக்கும்போது அவருக்கு யாருமே உதவி செய்ய முன்வரவில்லை.  மேலும் ஆம்புலன்ஸ் வாங்கி தருவதெல்லாம் அரசாங்கத்தின் வேலை . நீங்கள் எல்லாம் சின்ன தொலைக்காட்சி நடிகர்கள்,

இன்று இருக்கும் புகழ் பெயர் எல்லாம் நாளை இருக்காது , காற்றுள்ள போதே தூற்றிக்கொள் . இன்றைய சேமிப்பு நாளை உன்னுடைய வாழ்வாதாரம் நல்லது , செய்றது நல்லது தான் . ஆனால் தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும்,  மக்களுக்கு  நாளை எல்லாம் மறந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *