April 22, 2024

போஸ்டர் ஒவ்வொன்னும் தீயா இருக்கு ..!! நான் கடவுள் படத்தில் நடிக்க இருந்தது அஜித் தானா ..?? இப்போது ட்ரெண்டாகும் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நான் கடவுள்.  இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து பூஜா, மொட்டை ராஜேந்திரன் ,கிருஷ்ணமூர்த்தி, சிங்கம்புலி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் தேசிய விருது உட்பட பல உயரிய விருதுகளையும் குவித்தது .

இந்தப் படத்தின் மூலம் ஆர்யாவுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தானாம்.  அதுமட்டுமல்லாமல் பாலா இயக்கிய நந்தா படத்திலும் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம்.

கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லையாம் . இதனால் நான் கடவுள் படத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் பாலா.  மேலும் இந்த படத்திற்காக முடி எல்லாம் அதிகமாக வளர்த்து வந்திருக்கிறார் அஜித்.

ஆனால் இடையில் பாலாவுக்கும் , அஜித்துக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இதிலிருந்து அஜித் விலகியதாக கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் நான் கடவுள் கெட்டப்பில் இருக்கும் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *