April 29, 2024

இப்ப தான் மார்க்கெட் இல்ல ..!! அப்ப இவர அடிச்சிக்க ஆளே இல்ல..!! வைரலாகும் பிரசாந்தின் இளம் வயது புகைப்படங்கள் ..!!

90 களில் ரஜினி , கமலுக்கு இணையான மார்க்கெட்டில் இருந்து வந்தவர் தான் நடிகர் பிரசாந்த் . இயக்குனரும் , நடிகருமான தியாகராஜனின் ஒரே மகனான பிரசாந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து செம்பருத்தி ,ஆணழகன், ஜீன்ஸ் ,கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி ,ஆசையில் ஒரு கடிதம்,

பிரியாத வரம் வேண்டும் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் பிரசாந்த் . குறிப்பாக அப்போது தொடர்ந்து காதல் திரைப்படங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார்  நடிகர்  பிரசாந்த் . இதனாலேயே,

அப்போது இருந்த இளவட்டங்களுக்கு பிரசாந்த் என்றால் அவ்வளவு பிடிக்கும் . ஆனால் ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களில் நடிக்கிறேன் என்று தன்னுடைய திரை வாழ்க்கையை தொலைத்துக் கொண்டார் நடிகர் பிரசாந்த்.  இப்படி இருக்கும் நிலையில் பல வருடங்கள் கழித்து ,

அந்தகன் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்  நடிகர் பிரசாந்த் . இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பிரசாந்தின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *