May 6, 2024

ஒரு பக்கம் விவாகரத்து பிரச்சனை ..!! இன்னொரு பக்கம் உடலில் பிரச்சனை ..!! தொகுப்பாளினி டிடியின் வாழ்க்கையில் இத்தனை சோகங்களா ..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி . கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார் டிடி.  பின்னர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் ,பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் ,ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

குறிப்பாக காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி இவரை பெரிய அளவில் பிரபலமாகியது என்று தான் சொல்ல வேண்டும்.  இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.  இதனிடையே  கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி .

ஆனால் திருமணமான மூன்று வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இதனால் இவருடைய அடுத்த திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இது குறித்து டிடியின் அக்காவான பிரியதர்ஷினி கூறியதாவது , டி டி வாழ்க்கையில் பல துன்பங்களை ,

அனுபவித்து வருகிறார் ஒரு பக்கம் விவாகரத்து ,இன்னொரு பக்கம் உடலில் இருக்கும் பிரச்சனை மற்றொரு  பக்கம் சமூக வலைத்தளங்களில் வரும் மோசமான கமெண்ட்கள் .இதை எல்லாத்தையுமே அவர் தைரியமாக எதிர் கொண்டு வருகிறார்.  இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ,

வேறு யாருக்காவது வந்து இருந்தால் அதிலிருந்து மீண்டு இருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்றும் டிடியின் இரண்டாம் திருமணம் பற்றி தான் அடிக்கடி வதந்திகள் பரவி வருகிறது. அதை பற்றி டிடி தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் பிரியதர்ஷினி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *