April 29, 2024

என்னை எப்ப வந்து உதைப்பீர்கள்..!! தம்பிக்காக எழுந்து வாருங்கள் ..!! விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து கதறிய மன்சூர் அலிகான் ..!!

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக கொடி கட்டி பறந்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . ரஜினி,  கமல் போன்ற முன்னணி நடிகர்கள் இருக்கும்போது தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி டாப் நடிகர் வரிசையில் கலக்கி கொண்டு வந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் .  மேலும் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஒரு கை பார்த்தார் விஜயகாந்த் . ஆனால் அவருடைய கெட்ட நேரமோ என்னமோ,

தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர் .  மேலும் கேப்டன் விஜயகாந்த் உடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.

இன்னும் சொல்லப்போனால் இப்போதும் கேப்டன் மீது மன்சூர் அலிகானுக்கு மரியாதை கலந்த பயம் இருக்கிறதாம் . இப்படி இருக்கும் நிலையில் மருத்துவமனையில் இருந்து வரும் விஜயகாந்துக்காக தற்போது பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் மன்சூர் அலிகான் . அதில் அவர் கூறியதாவது,

அண்ணே ,தங்களுக்கு ஏன் இந்த சோதனை .? உங்களுடைய பாசமிகு தம்பி அழுகிறேன் ,நன்றாக வாருங்கள் . ஆபத்தில் இருக்கும் உங்களுடைய தம்பிக்கு உதவ வாருங்கள், சினிமாவில் என்னை கழுதை உதை உதைப்பீர்களே, இனி எப்ப வந்து உதைப்பீர்கள் .? உங்களுடைய இந்த,

நிலைமையை பார்த்தால் சாப்பிடுகிற சோறு கூட உடம்பில் ஒட்ட மாட்டேங்குது , நீங்கள் இன்னும் நூறு ஆண்டு நீடூழி வாழ வேண்டும் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்  நடிகர் மன்சூர் அலிகான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *