April 29, 2024

மனுஷன் உடைஞ்சு போயிட்டாரு ..!! விஜயகாந்தின் உடலை பார்த்து கண்கலங்கிய விஜய் ..!! கேப்டன் என்றால் உயிராக இருந்த தளபதி ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தற்போது உள்ள பல பிரபலங்களை வளர்த்து விட்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அப்படி கேப்டனால் வளர்ந்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி என்ற படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் விஜய் .

அப்போதிலிருந்து விஜய் மீது விஜயகாந்த் க்கு ஒரு தனிப்பிரியம் இருந்து வந்ததாம் .இதன் பிறகு நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் . ஆனால் இந்த திரைப்படம் மோசமான வரவேற்பையே பெற்றது.  இதனால் நடிகர் விஜயின்,

இரண்டாவது படமான செந்தூரப்பாண்டி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த்.  இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இன்னும் சொல்லப்போனால் இந்த படத்திற்காக விஜயகாந்த் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்.விஜயகாந்த் இந்த படத்தில்.

நடித்ததற்கு ஒரே காரணம் விஜயின் வளர்ச்சிக்காக மட்டும்தான்.  இதனாலேயே அப்போதிலிருந்து இப்போது வரை விஜயகாந்த் மீது விஜய்க்கும் ஒரு தனிப்பிரியம் உள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார் நடிகர் விஜயகாந்த் .அவருடைய மரண செய்தியை,

கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.  மேலும் பொது இடங்களில் கண்கலங்காத விஜய் விஜயகாந்தின் உடலை பார்த்து கண்கலங்கியது ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *