April 28, 2024

மறுபடியும் முதல்ல இருந்தா ..?? அடுத்த பைக் ரைடுக்கு சென்ற அஜித் ..!! அப்போ விடாமுயற்சி படம் அவ்வளவு தானா ..?? கடுப்பில் அஜித் ரசிகர்கள் ..!!

அஜித் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார்.  இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் நடிகர் அஜித்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே தொடங்க இருந்தது.

ஆனால் திடீரென அஜித் பைக் ரைடு சென்று விட்டதால் படப்பிடிப்பு தொடங்கவில்லை  . அது மட்டுமல்லாமல் விடாமுயற்சி படத்தின் கதையும் தயாராகாததால் அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை . இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகியும் இந்த படத்தின்,

படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்தது . இதனால் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில்  தகவல்கள் பரவியது . ஆனால் இந்த படம் இன்னும் டிராப்பாகவில்லை விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளரான லைக்கா சுபாஸ்கரன் ,

சமீபத்தில்  கூறியிருந்தார் . இதனால் கண்டிப்பாக இந்த மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். ஆனால் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அடுத்த பைக் ரைட் சென்றுவிட்டாராம்  நடிகர் அஜித்.

இதனால் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்குவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது . இதை பார்த்த அஜித் ரசிகர்கள் மறுபடியும் முதல்ல இருந்தா .?  என்று கடுப்பில் கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *