April 27, 2024

41 வயசு ,10 கோடி சம்பளம் ..!! பா ரஞ்சித்தின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா ..?? பிறந்தநாளில் வெளிவந்த தகவல் ..!!

பா ரஞ்சித் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  ஆரம்பத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வந்த பா ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் பாரஞ்சித்.  பின்னர் மெட்ராஸ் என்ற ,

சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ,

போன்ற படங்களை இயக்கியிருந்தார் பா ரஞ்சித் . இதைத்தொடர்ந்து சார்பட்டா பரம்பரை , நட்சத்திரம் நகர்கிறது போன்ற தரமான படங்களையும் இயக்கி இருந்த பா ரஞ்சித் அடுத்ததாக நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் .

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இப்படி இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்த பா ரஞ்சித் தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள் ,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் . இந்நிலையில்,

இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடும் பா ரஞ்சித்தின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது .அந்த வகையில் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கும் பா ரஞ்சித்தின் மொத்த சொத்து மதிப்பு 43 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *