May 2, 2024

அப்பாஸுடன் இருக்கும் இந்த சிறுவன் யாரென்று தெரிகிறதா ..?? அட, தற்போது இவர் பிரபலமான நடிகராச்சே ..?? எந்த நடிகருன்னு நீங்களே பாருங்க ..!!

ஜெய் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஜெய்.  பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் ஜெய் . இதை அடுத்து இந்த படத்திற்குப் பிறகு சுப்ரமணியபுரம் ,சரோஜா ,கோவா,

எங்கேயும் எப்போதும் ,ராஜா ராணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ஜெய். இப்படி நல்ல நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜெய் ஒரு கட்டத்தில் மொக்கையான கதை களங்களை தேர்வு செய்து,

தன்னுடைய மார்க்கெட்டையே  இழந்தார்.  அப்படி சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான பட்டாம்பூச்சி ,எண்ணித் துணிக ,காபி வித் காதல், தீரா காதல் போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . அப்படி இருந்தும் தற்போது அன்னபூரணி, கருப்பர் நகரம் என்று ,

நான்கு படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஜெய் . இதனால் வருகின்ற வருடம் இவருக்கு நன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதாக இருக்கும் போது 90 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகரான அப்பாஸுடன்,

புகைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் நடிகர் ஜெய் . தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *